செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (17:56 IST)

திமுக போகட்டும்; அதிமுகதான் டார்கெட்: தினகரன் டிவிஸ்ட்!

அமமுக தலைவர் டிடிவி தினகரன் அதிமுகவை பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். 
 
சமீபத்தில் அவர், வேலூர் மாவட்டம் அரக்கோணம், அம்மனூர், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். 
 
அப்போது அவர் பின்வருமாறு பேசினார், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியும், துரோக ஆட்சியும் நடைபெற்று வருகிறது. எனவே, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவினரை தோற்கடியுங்கள்.
 
விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பலர் அமமுகவை ஆதரித்து வாக்களியுங்கள். அப்போதுதான், ஜெயலலிதாவின் மக்கள் ஆட்சி அமைக்க முடியும் என்றார்.
 
இதன்மூலம் அவர் திமுகவை விட அதிமுக மீதுதான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பது தெரிகிறது. இருப்பினும் திமுகவிற்கு சில நெருக்கடிகளை தினகரன் கொடுக்க கூடும் என கூறப்படுகிறது.