திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (08:19 IST)

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்த திட்டமிட்ட நிலையில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்றுமுன்னர் தொடங்கியது 
 
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தலில் 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுவதாகவும் ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
 
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காலை 6.30 மணி முதல் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரும் வரை இந்த வாக்குகளை என்ன கூடாது என்று நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது