திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (18:35 IST)

ஸ்குரூவால் வந்த வினை: மறு தேர்தலுக்கு உத்தரவு!!

ஸ்பேனர் சின்னத்திற்கு பதில் ஸ்குரூ சின்னம் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்ததால் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் மறு வாக்கு பதிவு. 
 
தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. காலையில் தொடங்கிய தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அதே சமயம் சின்னங்களில் குளறுபடி, கட்சியினர் இடையேயான மோதல் ஆகியவற்றால் பல பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.  
 
விராலிமலை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சேகர் என்பவர் ஸ்பேனர் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு ஸ்பேனர் சின்னத்திற்கு பதில் ஸ்குரூ சின்னம் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், விராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15 வது வார்டில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் 30 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மறு தேர்தல் குறித்து தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.