திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 மார்ச் 2021 (18:29 IST)

மனித நேய மக்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!

மனித நேய மக்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் செய்து வருகின்றன என்பதும் தெரிந்தது
 
அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த இரண்டு தொகுதிகள் எவை எவை என்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சற்றுமுன் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் கத்திரிக்கோல் சின்னத்தை ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்திரிக்கோல் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது