ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (12:50 IST)

பள்ளிகளை திறக்க அரசு தயார் - அன்பில் மகேஷ்

செப். 1-ல் பள்ளிகளை திறக்க அரசு தயாராக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். 

 
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார்.  நாளொன்றுக்கு 50% மாணவர்களை மட்டும் பள்ளியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, செப். 1-ல் பள்ளிகளை திறக்க அரசு தயாராக உள்ளது. 14 மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. 
 
மாணவர்களை சுழற்சி முறையில் வகுப்புகளில் பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாக உள்ளது என கூறினார்.