திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2023 (17:09 IST)

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நெல்லை உள்பட தென் மாவட்டங்களில் மழை ஓரளவு குறைந்தாலும் மீட்பு பணிகள் கவனிக்க வேண்டிய நிலை இருப்பதால் திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 10 அடி அளவுக்கு தண்ணீர் இருந்த பகுதிகளில்  தற்போது படிப்படியாக தண்ணீர் குறைந்து வருவதாகவும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது  
 
இருப்பினும் பொதுமக்களை மீட்டெடுக்க நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.. இதேபோல்  இன்னும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran