நெல்லை பேருந்து நிலையத்தில் வெள்ள நீரில் மிதக்கும் ஆண் சடலம்.. அதிர்ச்சி புகைப்படம்..!
நெல்லை பேருந்து நிலையத்தில் ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.'
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்த நிலையில், நெல்லையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. நெல்லையின் முக்கிய பகுதிகளில் கூட தரைத்தளத்தில் உள்ள வீடுகள் கடைகள் மூழ்கி விட்டதாகவும் இதனால் லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் தீவிர முயற்சி காரணமாக மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் நெல்லை பேருந்து நிலையம் அருகே வெள்ள நீரில் மிதக்கும் ஆண் சடலம் ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
அந்த சடலம் யார் என்பது தெரியாத நிலையில் சடலம் மீட்கப்பட்டால் தான் மேலும் விவரங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran