1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (09:13 IST)

நாளை இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ளூர் விசேஷ நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறையை அறிவிப்பார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை என அந்த மாவட்டத்தின் ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார். 
 
நாளை சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை அடுத்து நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூலை எட்டாம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva