செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2021 (11:03 IST)

கொரோனா கால விடுமுறையால் ஊர் சுற்றிய மாணவன்… இப்போது பள்ளி திறந்த நிலையில் எடுத்த முடிவு!

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இப்போது 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு தற்போது 8 மாத காலத்துக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மங்களாபுரத்தைச் சேர்ந்த பரமகுரு என்ற மாணவர் 12 ஆம் வகுப்புப் படித்துள்ளார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் தினமும் நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளார். இப்போது பள்ளிகள் திறக்கப்பட்ட போதும் அவர் பள்ளி செல்வதில் ஆர்வம் இல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதனால் பரமகுருவின் பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். அதனால் மனமுடைந்த பரமகுரு வீட்டில் தனிமையில் இருக்கும் போது தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பரமகுருவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.