திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (14:23 IST)

சிம்பு பட ரிலீஸ் நாளில் அரசு விடுமுறை அளிக்க வேண்டும்- கூல் சுரேஷ் வேண்டுகோள்

சிம்புவின்  வெ.த.காடு பட ரிலீஸின்போது, அரசு விடுமுறை வேண்டும் பிரபல நடிகர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சிம்பு  நடிப்பில்,  கெளதம்  மேனன் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''வெந்து தணிந்தது காடு.''

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில்,  இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் விழா நடைபெற்ற இருக்கும் நிலையில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் விழாவில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் இப்படம் வெளியாகும் செப்டம்பர் 15 ஆம் தேதி  அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும்; இதை தான் மட்டும் கேட்கவில்லை சிம்புவின் ஒட்டுமொத்த ரசிகர்களும் கேட்கிறார்கள் என்று பிரபல நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கேஜிஎஃப் -2 ரிலீஸாகும் முன், இப்பட ரிலீஸின் போது விடுமுறை வேண்டும் என்று  ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.