செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (07:46 IST)

கனமழை எதிரொலி.. இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?

school
கனமழை காரணமாக நேற்று ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகின்றன. இந்த நிலையில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மற்றும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் இன்று பள்ளிகள் விடுமுறை என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
 
ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva