வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (20:24 IST)

மாணவியை கூட்டி சென்ற ஒருவர்; கூட்டு பலாத்காரம் செய்த மூவர்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஏமாற்றி கூட்டி சென்று மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். பள்ளி முடிந்ததும் டியூஷன் செல்லுவார். அப்போது அந்த சிறுமியின் வீட்டி அருகில் குடியிருக்கும் நரேஷ் நட்பாக பழகிவந்துள்ளார். 
 
ஒரு டியூஷனுக்கு சென்ற போது மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு நரேஷ் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ராஜா, சூர்யா என அவனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்னர். 
 
இது குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க, மூவரையும் கைது செய்தனர். ஆள் கடத்தல், கொலை முயற்சி, போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் மூவர் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.