எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை தலைவன் கைது: ஒரே வாரத்தில் சாதித்து காட்டிய தமிழக போலீஸ்!

atm robber
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை தலைவன் கைது:
siva| Last Updated: வெள்ளி, 2 ஜூலை 2021 (07:34 IST)
சென்னையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் கடந்த வாரம் நடந்த நிலையில், கொள்ளையர் தலைவன் உள்பட 4 பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஹரியானாவை சேர்ந்த அமீர், வீரேந்திர சிங், நசீர் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் இன்று ஹரியானாவில் கொள்ளையர் தலைவன் சவுகத் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கொள்ளையர் தலைவனை இன்று தமிழக போலீசார் சென்னைக்கு அழைத்து வருவதாகவும் நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

கொள்ளையர் தலைவனிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ஏற்கனவே கைவரிசை காட்டி இருப்பதாக தெரிய வருகிறது. ஆனால் நான்கு மாநில போலீசாரிடம் பிடிபடாத இந்தக் கொள்ளையர்கள் தமிழக போலீசாரிடம் பிடிபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

இந்த கொள்ளையில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்றும் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை அனைவரையும் கூண்டோடு பிடிக்க தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :