வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (17:14 IST)

சீமானை நேரில் சந்தித்த சவுக்கு சங்கர்!

SEEMAN SAVUKKU SHANKAR
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை  நேரில் சந்தித்துப் பேசினார் சவுக்கு சங்கர்

பிரபல யூடியூபராகவும், பத்திரிக்கையாளராகவும் இருந்து வருபவர் சவுக்கு சங்கர். இவரது அரசியல் கருத்துகளுக்காக அடிக்கடி ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார். சமீபத்தில் யூட்யூப் பேட்டி ஒன்றில் பேசிய அவர் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிமன்றம் தானாகவே வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்றகிளை சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளது.

சமீபத்தில் அவர் சிறையில் இருந்தபோது, அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தார். சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அரசு விடுதலை செய்ய வேண்டும் என  நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இந்த நிலையில், இன்று, சீமானை  நேரில் சந்தித்துப் பேசினார், சவுக்கு சங்கர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Edited by Sinoj