வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (13:20 IST)

சாட்டை துரைமுருகன் பாட்டுக்கு மார்க் ஜூக்கர்பெர்க்கைதான் கைது பண்ணனும்! கஸ்தூரி

சாட்டை துரைமுருகன் பாடிய பாட்டு தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆவதால் அடுத்ததாக மார்க் ஜூக்கர்பெர்க்கைதான் கைது பண்ணனும் என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தண்ணி தொட்டியில் மலம் கலந்தவனை கண்டு பிடிக்கவில்லை, கஞ்சா விக்குறவனை தடுக்கவில்லை,  கள்ளச்சாராயம் காய்ச்சி தாலி அறுத்தவனை கண்டுக்கவில்லை,  பாட்டு பாடுனதுக்கு உடனடி அரெஸ்ட்டு. திராவிட மாடல் சர்வாதிகாரியின் இரும்புக்கரம் வாழ்க.
 
நான்லாம் எப்பவோ பிரச்சார ஆட்டோ அலறி பல்லவி மட்டும் கேட்ட நினைவு... சாட்டை துரைமுருகன்  பாடுனப்போ கூட யாருக்கும் தெரிய வரலை, அவரை கைது பண்ணப்போதான் வைரல் ஆயிருச்சு. வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில கள்ளத்தனம் கருணாநிதி சாங் தான் தீ டிரெண்டிங். அப்போ அடுத்து மார்க் ஜூக்கர்பெர்க்கைதான் கைது பண்ணனும்! என கூறியுள்ளார்.
 
முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய பாடல் ஒன்றை சாட்டை துரைமுருகன் பாடியதாக அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் ஆனால் அவரை காவலில் வைக்க முடியாது என்று நீதிபதி அவரை விடுவித்தார் என்பது தெரிந்ததே. 
 
இந்த பாடல் தான் இயற்றியது அல்ல என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பே அதிமுகவினர் உருவாக்கிய பாடல் என்றும் சாட்டை துரைமுருகன் வழக்கறிஞர் கூறியதை அடுத்து சாட்டை துரைமுருகன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran