சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி! – எத்தனை நாட்கள் தெரியுமா?
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தற்போது பிரதோஷம் மற்றும் அமாவசை வருவதையொட்டி இன்று முதல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 11 மணி வரை மலையேற்றத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நான்கு நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் பயண அனுமதி தடை செய்யப்படும். இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.