திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (19:08 IST)

கல்லூரி மாணவி சத்யா படுகொலை: கைதான சதீஷ்-க்கு அக்டோபர் 28 வரை நீதிமன்ற காவல்

கல்லூரி மாணவி சத்யா படுகொலை: கைதான சதீஷ்-க்கு அக்டோபர் 28 வரை நீதிமன்ற காவல்
கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கில் சிக்கிய கல்லூரி மாணவர் சதீஷுக்கு அக்டோபர் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
சென்னையில் நேற்று கல்லூரி மாணவி சத்யா என்பவரை ரயிலில் தள்ளிவிட்டு சதீஷ் என்பவர் கொலை செய்தார். அவரை கொலை செய்த சதீஷ் நேற்று நள்ளிரவு பிடிபட்ட நிலையில் அவரிடம் விடிய விடிய விசாரணை செய்யப்பட்டது
 
இந்த நிலையில் கைதான சதீஷை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் அவருக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து சதீஷ் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சத்யா மற்றும் தற்கொலை செய்து கொண்ட அவரது தந்தை மணிகண்டன் ஆகியோர் இவரது உடல் தகனம் சற்றுமுன் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
Edited by Mahendran