1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (17:32 IST)

வங்கி லாக்கரில் சேமித்த பணத்தை அரித்த கரையான்!

money
உத்தரபிரதேசத்தில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட பணத்தை கரையான் அரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில்  முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள மொரதாபாத்தில் வசிப்பவர் அல்கா பதாக். இவர் சிறுதொழில் மற்றும் டியூசன் எடுத்து வருமான ஈட்டி வந்துள்ளார்.

அந்த பணத்தை  தன் மகளின் திருமணத்திற்காக வங்கி லாக்கரில் சேமித்து வைத்திருந்தார்.

இந்த நிலையில், தனது மகளின் திருமணத்திற்காக லாக்கரில் வைத்திருந்த ரூ.18 லட்சம் பணத்தை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.