செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:40 IST)

நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்.. வங்கிகள் கடன் தர மறுப்பதாக புகார்..!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு அறிவித்தபடி வங்கிகள் கடன் தர மறுப்பதாக தொழில்முனைவோர் சதீஷ் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு கடன் ஆணைகளை நிர்மலா சீதாராமன் வழங்கிக் கொண்டிருந்தபோது திடீரென  சதீஷ் என்பவர் அமைச்சர் மீது குற்றச்சாட்டு தெரிவித்தார்.
 
உடனே அவரை மேடைக்கு வந்து குறையை தெரிவிக்க நிர்மலா சீதாராமன் அழைத்தார். மேடைக்கு வந்த சதீஷ் என்ற அந்த நபர், கடனுக்கான உத்தரவாதம் வழங்க தயாராக இருந்தும் கடன் கிடைக்கவில்லை என புகார் அளித்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்
 
Edited by Mahendran