1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (08:24 IST)

சிறையில் சிந்தனை - சுயசரிதை எழுதுகிறாரா சசிகலா ?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, சுயசரிதை எழுத முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


 

 
சசிகலாவும், இளவரசி, சுதாகரன் ஆகியோர் தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
சசிகலாவை சந்திக்க பெங்களூருக்கு செல்ல வேண்டியிருப்பதால், அவரது உறவினர்கள் மற்றும அதிமுகவினர் அடிக்கடி அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில்தான் அதிமுக துணைப் பொதுச்செயாலளர் டி.டிவி.தினகரன் அங்கு சென்று வந்தார். அதன்பின் யாரும் செல்லவில்லை.
 
இந்நிலையில், அமைதியாகவும், எதையோ யோசித்தவாறும், எப்போதும் சிந்தனையாகவே இருக்கிறாராம். மேலும், அவர் தனது பழைய நினைவுகளை குறிப்பெடுத்து வருகிறாராம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் அவருக்கு ஏற்பட்ட அறிமுகம், அரசியலில் அவருடன் பயணித்தது, அவருக்கு பின்னால் நின்றது, கட்சிப் பணிகளை கையாண்டது மற்றும் தற்போது அவர் அனுபவித்து வரும் சிறை வாழ்க்கை என அனைத்தையும் அவர் குறிப்பு எடுத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
எனவே, சிறை வாசம் முடிந்து அவர் வெளியே வரும் போது, அவரின் சுயசரிதை வெளியே வரும் எனவும், அதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.