1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (15:03 IST)

சிறையில் சுடிதாரில் சசிகலா; கையில் பேக்குடன் எங்கேயோ கிளம்புகிறார் போல! (வீடியோ இணைப்பு)

சிறையில் சுடிதாரில் சசிகலா; கையில் பேக்குடன் எங்கேயோ கிளம்புகிறார் போல! (வீடியோ இணைப்பு)

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை விதிகள் மீறப்பட்ட விவகாரத்தை ஒட்டு மொத்த இந்தியாவும் பார்த்து வியந்து நிற்கிறது.


 
 

 
Image Source: சற்றுமுன்

லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறைக்கைதியை சொகுசாக சிறையில் உலாவ விட்டுள்ள கர்நாடக சிறைத்துறையின் கன்னியம் கேள்விக்குறியாகி உள்ளது. ஒரு கைதி செய்த தவறை உணர்ந்து திருந்துவதற்கு தான் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். மாறாக சொகுசு வாழ்க்கை நடத்த அல்ல.
 
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதி சசிகலா சிறையில் சொகுசாக வாழ்க்கை நடத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே சசிகலா சிறையில் நைட்டியுடன் ஜாலியாக வலம் வரும் வீடியோ வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நன்றி: சற்றுமுன் & Prajaa TV
 
அந்த வீடியோவில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள சசிகலா சுடிதார் அணிந்துகொண்டு கையில் பேக்குடன் எங்கேயோ கிளம்ப தயாராக நிற்பது போல காட்டுகிறது. அவருடன் சிறையில் அடைக்கப்பட்ட அவரது அண்ணன் மனைவி இளவரசி சிகப்பு நிற புடவையில் நிற்கிறார். இந்த வீடியோ கர்நாடக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.