1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (17:50 IST)

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சசிகலா திடீர் விசிட் : காரணம் என்ன?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.


 

 
இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால், பல்வேறு அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது.
 
ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனை வழிபடுவது ஆட்சியில் உள்ளவர்களுக்கு பலன் தரும் என்ற நம்பிக்கை உண்டு. அதனாலேயே, ஜெயலலிதாவின் பிரதிநிதியாக அவர் அங்கு வந்து வழிபட்டு சிறப்பு பூஜைகள் செய்தார் என்று தெரிகிறது.
 
அவர் அந்த கோவிலுக்கு வருவது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், சசிகலா அங்கு வந்திருந்த தகவல் வெளியே பரவியதும் உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் கோவிலின் முன் குவிந்தனர். ஆனால், பூஜையை முடித்து விட்டு வேகமாக கிளம்பிவிட்டார் சசிகலா.
 
அதன்பின் அவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நாச்சியார் திருக்கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் அமைச்சர்கள் யாரும் வரவில்லை. அந்த கோவிலின் கருவறை சென்று சாமி கும்பிட்டுவிட்டு புறப்பட்டார் சசிகலா.