நீட் நாடகம் முடிவுக்கு வந்தது: அண்ணாமலை
தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதிலிருந்து நீட் நாடகம் முடிவுக்கு வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நீட் விலக்கு இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது
இந்த மசோதாவை நேற்று கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதால் திமுக உருவாக்கிய நீட் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றோம் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.