திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (19:23 IST)

தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது; திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பிய சசிகலா

தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்றும் தன்னை சகோதரி என்று ஊடகங்களில் குறிப்பிடக்கூடாது என்றும் தனது வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் மூலம் சசிகலா திவகாரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 
சசிகலா சிறைக்கு சென்ற பின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டி ஒதுக்கி வைத்துவிட்டனர். அதைத்தொடர்ந்து தினகரன் கட்சியை மீட்பேன் என்று பல வழிகளில் போராடி வருகிறார்.
 
மேலும் சசிகலா குடும்பத்தினரிடையே யாரும் கட்சிக்கு பொறுப்பேற்பது என்ற சண்டை துவங்கியது. இதனால் தினகரன், திவாகரன் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரைக்கொருவர் தாக்கி பேசி கொண்டனர்.
 
இந்நிலையில் சசிகலா தனது வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் மூலம் திவாகரனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது என்றும் தன்னை சகோதரி என்று ஊடகங்களில் குறிப்பிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.