திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2019 (11:46 IST)

பாஜக பாகிஸ்தானிடம் பணம் பெறுகிறது?? – திக் விஜய் சிங்கின் திடீர் கருத்து

பாஜக, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் பெறுவதாக திக் விஜய் சிங் பேசியதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான திக் விஜய் சிங் சில நாட்கள் முன்னர் ஒரு பேட்டியில் “பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்காக உளவு பார்ப்பவர்களில் முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவர்கள் அதிகம். பஜ்ரங் தள் மற்றும் பாஜக ஆகியவை பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் பணம் பெறுகின்றன” என்று பேசியதாக கூறப்படுகிறது.

மத்தியில் ஆளும் தேசிய கட்சி ஒன்றின்மேல் அவர் தேச விரோதமாக பேசியிருப்பதாக பாஜக கட்சியினர் பலர் கொதித்தெழுந்தனர். இதற்கு மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர்களில் ஒருவரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுஹான் உள்ளிட்டோர் தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார் திக் விஜய் சிங். அதில் பாஜக மற்றும் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த சிலர் பாகிஸ்தானிடம் பணம் பெற்றதாக சில நாட்கள் முன்னர் கைது செய்யப்பட்டனர். அதை குறிப்பிட்டு பாஜக ஆட்கள் பணம் பெற்றதாகதான் கூறினேன், பாஜக பெற்றது என கூறவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.