1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (08:46 IST)

நிருபரிடம் சீறிய சசிகலா புஷ்பா: மப்பு கேள்வி கேட்டதால் ஆத்திரம்!

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும், அறைந்ததாகவும் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்நிலையில் இது குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நிருபர் ஒருவரின் கேள்விக்கு எரிச்சலடைந்தார்.


 
 
தன்னுடைய பதவியை வேறு யாருக்கோ அளிக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என கூறினார் சசிகலா புஷ்பா. அப்போது நிருபர் ஒருவர் நீங்கள் மது குடித்துவிட்டு தகராறு செய்ததாக ஜெயலலிதா உங்களிடம் விசாரித்ததாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினார்.
 
நிருபரின் இந்த கேள்வியை எதிர்பார்க்காத சசிகலா புஷ்பா எரிச்சலுடன் இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்க கூடாது, சரியான கேள்விகளை கேளுங்கள் என்றார். நான் ஒரு பெண்மணி. என்னிடம் எப்படி கேள்வி கேட்க வேண்டுமோ அப்படித்தான் கேட்க வேண்டும்.
 
தொடர்ந்து பேசிய சசிகலா புஷ்பா, யாரு இவர், எந்த மீடியா என கேள்வி கேட்க ஆரம்பித்தார். பின்னர் தனிப்பட்ட விஷயங்களை பற்றி கேட்கவேண்டாம் என்ற மூத்த பத்திரிகையாளர்களின் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தடுத்த கேள்விகளுக்கு நகர்ந்தனர் பத்திரிகையாளர்கள்.