சசிகலா குணமடைந்து தமிழகம் வரவேண்டும் – அதிமுக அமைச்சர் பிராத்தனை!

Last Updated: ஞாயிறு, 24 ஜனவரி 2021 (16:17 IST)

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா உடல்நலமின்றி இருக்கும் நிலையில் அவர் குணமாக வேண்டும் என பிராத்திப்பதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடுமையான நிமோனியா காய்ச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது. விடுதலை ஆக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சசிகலாவின் உடல்நலக் குறைவு பலவிதமான சந்தேகங்களை எழிப்பியுள்ளது.

இந்நிலையில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது ‘சசிகலா விரைவில் குணமாகி தமிழகம் வரவேண்டுமென்று பிராத்திப்போம்’ எனக் கூறியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :