1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 26 நவம்பர் 2016 (14:14 IST)

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு?: அப்பல்லோவில் சிகிச்சை!

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு?: அப்பல்லோவில் சிகிச்சை!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


 
 
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று வரை சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார் அவரது நெருங்கிய தோழி சசிகலா.
 
ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவால் மிகுந்த மன சோர்வுடனும், உடல் சோர்வுடனும் காணப்பட்டார் சசிகலா. இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்த செய்தி அதிமுக அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.