திங்கள், 19 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஜனவரி 2026 (13:59 IST)

ஜனவரி 12-ல் பிஎஸ்எல்வி சி 62 ராக்கெட்.. இஸ்ரோவில் சூப்பர் தகவல்

ஜனவரி 12-ல் பிஎஸ்எல்வி சி 62  ராக்கெட்.. இஸ்ரோவில் சூப்பர் தகவல்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 19 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-62  ராக்கெட்டை வரும் ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது. 
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த செயற்கைக்கோள் உயர்தர படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது என்பதால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ கண்காணிப்பு பணிகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த மைல்கல்லாக அமையும் என கருதப்படுகிறது. 
 
வானிலை முன்னறிவிப்பு மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை பெறவும் இது பெரிதும் உதவும். புவி கண்காணிப்பில் இந்தியாவின் விண்வெளித் திறனை இது அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran