1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Metro Update: Trains Every 3 Minutes Between Alandur and Washermanpet

மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்.. அதிரடி அறிவிப்பு..!

Metro Train
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் இனி நீண்ட நேரம் ரயிலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீல வழித்தடத்தில் நெரிசல் மிகுந்த நேரங்களில் இனி 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
பயணிகளின் நேரத்தை சேமிக்கவும், கூட்ட நெரிசலை குறைக்கவும் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கால அட்டவணையின்படி, காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் மூன்று நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். 
 
மற்ற சாதாரண நேரங்களில் வழக்கம் போல 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அலுவலகம் செல்பவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. 
 
மெட்ரோ ரயில் பயணத்தை மேலும் எளிதாக்கும் நோக்கில், சேவைகளை மேம்படுத்தி வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜனவரி 12-ல் பிஎஸ்எல்வி சி 62 ராக்கெட்.. இஸ்ரோவில் சூப்பர் தகவல்