ரஷ்யா கொடி ஏற்றி வந்த கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா.. இரு நாடுகளுக்கும் இடையே பரபரப்பு..!
அட்லாண்டிக் கடல் பகுதியில் வெனிசுலா நாட்டை நோக்கி எண்ணெய் ஏற்றி சென்ற ரஷ்ய கொடியுடன் கூடிய கப்பலை அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைப்பற்றியுள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச தடைகளை மீறி வெனிசுலாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதால் இந்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அந்த கப்பலில் ரஷ்ய நாட்டின் கொடி பறந்ததை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
வெனிசுலா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி ரஷ்யா தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாகும். அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ரஷ்யாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது நாட்டின் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதை ஒரு ஆக்கிரமிப்பு செயலாக கருதும் ரஷ்யா, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் சர்வதேச கடல் எல்லை பகுதிகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
Edited by Mahendran