1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (15:58 IST)

என்னால தூங்க முடியல, கூட்டிட்டுப் போயிடுங்க: கதறி அழுத சசிகலா!

என்னால தூங்க முடியல, கூட்டிட்டுப் போயிடுங்க: கதறி அழுத சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தன்னை பார்க்க வருபவர்களிடம் தன்னால் இங்கு இருக்க முடியவில்லை, கூட்டிட்டுப் போயிடுங்க என கதறி அழுவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
சில தினங்களுக்கு முன்னர் சசிகலாவை சந்திக்க சில சென்றுள்ளனர். இதுவரை அழாமல் இருந்த சசிகலா அப்போது அழ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. என்னால இங்கே இருக்க முடியல. எப்படியாவது என்னை இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடுங்க என்று அழுதேவிட்டாராம் சசிகலா.
 
மேலும், இங்க வெயில் அதிகமா இருக்கு, என்னால சாப்பிடவும், தூங்கவும் முடியல. இரவு முழுவதும் தூக்கமே வருவது இல்லை. முழிச்சுட்டே இருக்கேன் என்று சசிகலா அழுதுள்ளார். புழல் ஜெயிலுக்கு மாத்துறதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு இருக்கிறோம். நீங்க தைரியமா இருங்க என பார்க்க சென்ற மன்னார்குடி உறவுகள் கூறி சமாதானம் செய்துள்ளது.