1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 28 ஜனவரி 2017 (15:53 IST)

விழா மேடையிலேயே கிழிக்கப்பட்ட சசிகலாவின் புகைப்படம்: அதிர்ச்சியில் அதிமுகவினர்!

விழா மேடையிலேயே கிழிக்கப்பட்ட சசிகலாவின் புகைப்படம்: அதிர்ச்சியில் அதிமுகவினர்!

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனதை அதிமுகவின் ஒரு பிரிவினர் எதிர்த்து வருகின்றனர். ஆனால் அவர் தற்போது தமிழக முதல்வராக முயன்றுவருவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் மீதான எதிர்ப்புகள் குறையவில்லை என்பதை அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.


 
 
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது தோழி சசிகலா அவரது இடத்தை பிடிக்க முயன்று வருகின்றனர். இதன் தொடக்கமாக அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வர் பதவியையும் கைப்பற்ற அவர் திட்டமிட்டு உள்ளார்.
 
ஆனால் அவருக்கு கட்சியில் சிலர் ஆதரவு கொடுத்தாலும், பெரும்பாலனோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அடிமட்ட தொண்டர்கள் யாரும் ஏற்கவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளிப்படுகின்றன.
 
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழா மேடையில் சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் படம் போடப்பட்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதனை அதிமுக பிரமுகர் ஒருவர் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த அதிமுக பிரமுகர் சசிகலாவின் படத்தை மட்டுமே குறிவைத்து கிழித்துள்ளார். இதனை பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் அந்த நபரை அங்கிருந்து இழுத்து சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.