வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஜூன் 2023 (13:19 IST)

தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி.. அன்புமணி, சசிகலா வாழ்த்து..!

தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி, இறுதிப்போட்டியில் ஹரியானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் அந்த அணிக்கு  அன்புமணி, சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
அன்புமணி தனது வாழ்த்தில், ‘பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளின் இறுதியாட்டத்தில் ஹரியானா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வாகையர் பட்டம் வென்ற தமிழ்நாடு அணி  வீராங்கணைகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டு அணியை சிறப்பாக வழிநடத்திய கடலூர் வீராங்கனை இந்துமதி கதிரேசனுக்கு சிறப்பு வாழ்த்துகள்! என்று தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
அதேபோல் சசிகலா தனது ட்விட்டரில், ‘பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள தமிழக மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, மென்மேலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
 
Edited by Mahendran