ரசிகர்களுக்காக படப்பிடிப்புத் தளத்தைவிட்டு வெளியே வந்த விஜய்

CM| Last Updated: வெள்ளி, 23 மார்ச் 2018 (22:17 IST)
தன்னுடைய ரசிகர்களைப் பார்ப்பதற்காக படப்பிடிப்புத் தளத்தைவிட்டு வெளியே வந்துள்ளார் விஜய். 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த இரண்டு நாட்களாக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்று வருகிறது.
 
தற்போது படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் சங்கம் அனுமதி மறுத்துள்ளது. ஆனாலும், அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இருந்தாலும், இந்த விஷயம் விமர்சனத்துக்கு உள்ளானதால், படப்பிடிப்பு நடக்கும் இடம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
எனவே, நேற்று விக்டோரியா ஹால் முன்பு ஏராளமான விஜய் ரசிகர்கள் திரண்டனர். நீண்ட நேரமாக அவர்கள் வாசலிலேயே காத்திருப்பதைத் தெரிந்துகொண்ட விஜய், வெயிலில் அவர்கள் வாடுவதைக் கேள்விப்பட்டு படப்பிடிப்புத் தளத்தைவிட்டு வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். தங்கள் ஹீரோவைக்  கண்ட மகிழ்ச்சியில் அவர்கள் ஆராவாரம் செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :