வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 12 நவம்பர் 2017 (13:48 IST)

மோடியை சீண்டும் சரத்குமார்: நான் விளம்பரம் தேடுபவன் இல்லை!

மோடியை சீண்டும் சரத்குமார்: நான் விளம்பரம் தேடுபவன் இல்லை!

பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்தபோது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த புகைப்படம் ஊடங்காளில் வெளியானது. இதனை மோடியை கிண்டலடிக்கும் விதமாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் சீண்டியுள்ளார்.


 
 
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசினார்.
 
அப்போது பேசிய அவர், நான் ஒர் அரசியல் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவன். நான், என் மனைவி ராதிகாவுடன் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வந்தேன். அதை படமெடுத்து செய்தி வெளியிட்டு விளம்பரம் தேட நான் மோடி இல்லை சரத்குமார் என்றார். மேலும் தனக்கு அரசியல் பாடத்தை சொல்லித்தந்தவர் கருணாநிதி எனவும் கூறினார் அவர்.