திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (17:58 IST)

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!
நடிகர் சரத்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் ரசிகர்கள் முன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 
 
நான் உழைப்பால் உயர்ந்தவன். என் 36 ஆண்டுகால சினிமாவில் நீங்கள் கொடுத்ததை மீண்டும் உங்களுக்கே கொடுக்கத்தான் வந்திருக்கிறேன். நான் டெல்லியில் பிறந்தவன். எனக்கும் டெல்லிக்கும் தொடர்பிருக்கிறது. அதனால்தான் கலைஞர் என்னை எம்.பியாக அறிவித்து டெல்லி அனுப்பினார். இப்போது டெல்லியோடு அரசியல் களத்தில் இணைந்திருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது.
 
நெல்லையில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அமித் ஷா ஜீ தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பூத் கமிட்டி அமைப்பது அவ்வளவு இலகுவான விஷமல்ல. நான் தி.மு.கவுக்கு ஆதரவாக இருந்தபோது கடுமையாக உழைத்திருக்கிறேன். அப்போது 24 மணி நேரம் பிரசாரம் செய்யலாம். நான் 22 மணி நேரம் பிரசாரம் செய்திருக்கிறேன்.
 
வெளிப்படையாக, வெற்றிகரமாக ஆட்சி செய்துக்கொண்டிருக்கும் ஒரு பிரதமரை கத்துக்குட்டியான ஒருவர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைக்கிறார். நீங்கள் கொடைநாட்டிலே நடுத்தெருவில் நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? இப்போதும் உங்களால் அப்படி சொல்ல முடியாது. இவ்வாறு சரத்குமார் பேசினார்.

Edited by Siva