காலில் விழுந்து கெஞ்சாத குறை... கமலை சந்தித்த பின் சரத்குமார் பேட்டி!

Sugapriya Prakash| Last Updated: சனி, 27 பிப்ரவரி 2021 (12:14 IST)
யார் முதல்வர் வேட்பாளர் என்பதை விட வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என கமலை சந்தித்த பின்னர் சநத்குமார் பேட்டி. 

 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலுடன் சரத்குமார் சந்திப்பை நடத்தினார். சட்டப்பேரவை தேர்தலில் ஐ.ஜே.கே. - சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. 
 
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம். கமலஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும். நல்ல எண்ணம் கொண்டவர்கள் ஒன்றிணைந்தால் நன்றாக இருக்கும். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்தேன். 
 
யார் முதல்வர் வேட்பாளர் என்பதை விட வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தால்தான் எதையும் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கிறேன். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள். எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும். 
 
காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்றால் இந்த பண அரசியல் ஒழிய வேண்டும். நான் ஒரு பத்தாண்டு காலம் அதிமுகவுடன் பயணித்துள்ளேன். அதிமுகவில் இருந்து கூட்டணி குறித்து யாரும் பேசாததால் அங்கிருந்து விலகினேன் என தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :