திருத்தணி சம்பவம்!. என் வீட்டு பக்கத்திலேயே!.. சந்தோஷ் நாராயணன் பகீர்!...
சமீபத்தில் சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி சென்ற புறநகர் ரயிலில் வடமாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்கிற ஒரு வாலிபரை திருத்தணியை சேர்ந்த 4 சிறுவர்கள் கடுமையாக தாக்கி வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இது தொடர்பான வீடியோவை சமூகவலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து தமிழக அரசு இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தமிழகத்தில் கஞ்சா போதைப் பொருட்களை தடுக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்தார்கள். இதைத்தொடர்ந்து அந்த நான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷநாராயணன் தனது சமூவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். சென்னையில் நான் வசிக்கும் பகுதி போதைப் பொருளுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிக அபாயகரமாக இருக்கிறது. எனது ஸ்டுடியோ பகுதியில் உள்ள பல அப்பாவி கட்டுமான தொழிலாளர்கள் சமீபத்தில் பலமுறை தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலை நடத்துபவர்களில் பெரும்பாலானோர் இனவெறிகளாக இருப்பதற்கு பெருமைப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களை சேர்ந்த மக்களை ஒட்டுமொத்தமாக வெறுத்து தாக்குகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல உள்ளூர் அரசியல் குழுக்களும் சாதி அடிப்படையிலான அமைப்புகளும் ஓடி வருகின்றன. இதை ஏற்றுக்கொண்டு உண்மை நிலையை புரிந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியாதா?.. நாம் உட்பட அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என அவர் தெரிவித்திருக்கிறார்.
ஒருபக்கம், பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபர் சுராஜ் முழுமையாக சிகிச்சை பெறாமலேயே தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.