ஜெயலலிதா, கருணாநிதி உடலை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்.....
மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் இறுதி ஊர்வலத்தின் போது அவர்களின் உடலை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் வண்டிகளை இயக்கியது ஒரே டிரைவர்தான் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பி.ஆர். எம்.எம்.சாந்தகுமார் (58). இவர் ஹோமேஜ் எனும் இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழகத்தில் முக்கிய நபர்கள் மரணமடையும் போது ஆம்புலன்ஸ் வண்டியை இயக்க இவரையே அழைக்கிறார்கள்.
ஜெயலலிதா மரணமடைந்த போது அப்போலோ மருத்துவமனையிலிருந்து அவரது உடலை போயஸ் கார்டனுக்கும், அங்கிருந்து ராஜாஜி ஹால், இறுதியில் மெரினா கடற்கரை வரைக்கும் இவரே ஆம்புலன்ஸ் வண்டியில் எடுத்து சென்றார்.
அதேபோல், மறைந்த கருணாநிதியின் உடலை காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் எடுத்து சென்றது, அங்கிருந்து சி.ஐ.டி நகருக்கு கொண்டு சென்றது, இறுதி ஊர்வலமாக அவரது உடலை மெரினா கடற்கரைக்கு கொண்டு செல்லும் வாகனத்தில் இவரே ஓட்டுனராக இருந்துள்ளார்.
ஜெயலலிதா, கருணாநிதி மட்டுமல்ல. நடிகர் சிவாஜி மற்றும் துக்ளக் ஆசிரியர் சோ என அனைவரின் இறுதி ஊர்வல வாகனத்தையும் அவரே ஒட்டி சென்றுள்ளார்.
தலைவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது அவர்களின் உடலை எடுத்து செல்வதை பாக்கியமாக கருதுகிறேன். எனவே, சேவை மனப்பாண்மை, பக்தி, மரியாதையுடன் இந்த பணியை செய்து வருகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சாந்தகுமார்.