திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 ஜூன் 2018 (18:32 IST)

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்...

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை இரவு முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 
 
108 ஆம்புலன்ஸ் சேவை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு, காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
 
ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்காக பல முறை, பொதுக்கூட்டம், போராட்டம் என தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
எனவே, சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை இரவு முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.