1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sanitary workers from trichy and Coimbatore came to Chennai for rescue work

சென்னை வெள்ள பாதிப்பு… மீட்பு பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் வருகை!

தூய்மைப் பணியாளர்கள்
கோப்பு படம்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வரலாறு காணாத வெள்ள சேதத்தை சந்தித்துள்ளது. சென்னையில் பெய்த பெருமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் இப்போது ஆந்திராவின் நெல்லூரில் மையம் கொண்டுள்ள நிலையில் சென்னையில் மழை குறைந்துள்ளது. இதையடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக திருச்சியில் இருந்து 250 தூய்மைப் பணியாளர்கள் சென்னை நோக்கி வருகை தந்துள்ளனர். அதே போல கோயம்புத்தூரில் இருந்தும் தூய்மைப் பணியாளர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதே போல வேறு சில மாவட்டங்களில் இருந்தும் தூய்மைப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இருந்து 190 கிமீ தூரத்தில் மிக்ஜாம் புயல்… 9 கிமீ வேகத்தில் நகர்வு!