திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (14:33 IST)

விருது தொகையை மீண்டும் அரசுக்கே கொடுத்த சங்கரய்யா!

தமிழக தகைசால் விருது மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் விருது தொகையை தமிழக அரசுக்கே வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் பல்வேறு கலைஞர்கள், சமூக செயற்பாட்டளர்களுக்கு மாநில அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவர்களை கௌரவிக்கும் விதமாக தகைசால் தமிழர் என்ற புதிய விருதை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விருது முதலாவதாக பொதுவுடமை இயக்க தலைவர் என்.சங்கரய்யாவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான என்.சங்கரய்யா, சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவரும் ஆவார்.

தமிழக அரசு தகைசால் விருதும், ரூ.10 லட்சம் விருது தொகையும் தருவதாக அறிவித்த நிலையில் அந்த விருது தொகையை மீண்டும் தமிழக அரசுக்கே வழங்குவதாக என்.சங்கரய்யா அறிவித்துள்ளார்.