திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (11:33 IST)

கழுகுன்றத்தில் விழுந்த மர்மபொருள்! கடற்படையை சேர்ந்ததா? – மக்களிடையே பரபரப்பு!

திருகழுகுன்றத்தில் வானிலிருந்து விழுந்த பொருள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில அது கடற்படை தொடர்புடையது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் ஆடுகள் வளர்த்து வந்த நிலையில் வானிலிருந்து பிராகசமான வெளிச்சத்தோடு மர்ம பொருள் ஒன்று அப்பகுதியில் விழுவதை கண்டுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அப்பகுதிக்கு விரைந்த விஏஓ மற்றும் போலீஸார் 10 கிலோ எடை கொண்ட அந்த மர்ம பொருளை ஆய்வுக்கு உட்படுத்த எடுத்து சென்றுள்ளனர். எலெக்ட்ரிக் பட்டன்களுடன் கூடிய சிலிண்டர் வடிவ பொருளில் அபாய முத்திரையும் இடப்பட்டிருந்தது.

இதுத்தொடர்பாக அரக்கோணம் கடற்படைக்கு காவல்துறை அளித்த தகவலின் பேரில் கழுக்குன்றம் வந்த கடற்படை அதிகாரிகள் அது வெடிபொருள் அல்ல என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் அந்த பொருள் கடற்படை விமானத்தில் கொண்டு செல்லும்போது தவறி விழுந்ததா என விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.