1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 10 மே 2016 (16:08 IST)

திமுக, அதிமுக பிரச்சார விளம்பரத்தில் ஒரே பாட்டி - கழுவி ஊற்றும் இணையவாசிகள்

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் பிரச்சார வீடியோவிலும், ஒரே வயதான மூதாட்டி நடித்துள்ளது தெரிய வந்துள்ளதை அடுத்து இணையவாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
 

 
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் தங்களது பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர்.
 
மேலும், முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தாங்கள், தங்களது தொலைக்காட்சி நிறுவனங்களில் தங்களது கட்சிக்கு வாக்களிக்கும்படி விளம்பர வீடியோக்களை ஒளிபரப்பி வருகின்றன.
 
இந்நிலையில், ஆளும் அதிமுகவின் சாதனையை விளக்கி, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படியும், அதே மூதாட்டி அதிமுக ஆட்சியின் அவலத்தை விளக்கி திமுகவிற்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படியும் கூறுகிறார்.
 
இரண்டு கட்சிகளின் பிரச்சார வீடியோவிலும், ஒரு மூதாட்டி பேசியதை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
’தேர்தலில்தான் மக்கள் முட்டாளாக்கப்படுவார்கள் என்று பார்த்தால்,  விளம்பரத்துலயுமா?’ என்று ஒருவர் கூறியுள்ளார்.
 
மற்றொருவர், ’நம்மை எவ்வளவு பைத்தியகாரன்னு இந்த திமுக அதிமுக நினைக்கிறாங்க பாருங்க?’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இன்னொரு நபரோ, ’டாஸ்மாக், கிரானைடு, தாதுமணல், ஆத்துமணல்ல தான் கருணா+ ஜெயா கூட்டணின்னு பாத்தா, பிரச்சார விளம்பரதுக்கு கூட ஒரே கிழவிய ரெண்டு பேரும் புக் பண்ணியிருக்கீங்களே!! .!!’ என்று பதிவிட்டுள்ளார்.

வீடியோ இங்கே: