திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 அக்டோபர் 2018 (11:48 IST)

கணவனை விட்டு காதலுடன் சேர்ந்த பெண் – உச்சநீதிமன்ற தீர்ப்பு

சேலம் அருகே உள்ள ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கணவலை விட்டுவிட்டு தனது காதலனோடு போலிஸ் முன்னிலையில் சேர்ந்துள்ளார்.

சேலத்தை அடுத்த ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணைக் கட்டாயப்படுத்தி பழனிச்சாமி என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து ஒரு மாதமாக விருப்பமில்லாமல் பழனிச்சாமியோடு வாழ்ந்து வந்துள்ளார் அந்த பெண். இந்நிலையில் நேற்று அவர் தனது தாலியை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு தனது காதலனோடு சென்றுள்ளார்.

இதனையடுத்து தனது காதலன் சிவக்குமாரோடு போலிஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். போலிஸார் உறவினர்கள் மற்றும் கணவர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அந்த பெண் தனக்கு கணவரோடு வாழப் பிடிக்கவில்லை என்றும் காதலனோடு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தன்னை தனது காதலனோடு அனுப்பாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி கூறியுள்ளார். இதனால் போலிஸார் அந்த பெண்ணை அவரது காதலனோடு அனுப்பி வைத்துள்ளனர்.