ஊரடங்கை மீறி செயல்பட்ட ஆலை! – விஷவாயு தாக்கி இருவர் பலி!
சேலம் அருகே ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட ஆலை ஒன்றில் விஷவாயு தாக்கி தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு தொழிற்சாலைகளும் இயங்குவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் ஆத்தூர் அருகே சதாசிவபுரத்தில் தனியார் ஜவ்வரிசி ஆலை ஒன்று ஊரடங்கை மீறி ரகசியமாக செயல்பட்டு வந்துள்ளது. அப்போது திடீரென ஆலையில் விஷவாயு தாக்கியதில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் ஆறுமுகம் மற்றும் கார்த்திக் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கை மீறி ஆலை செயல்பட்டது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.