புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (18:06 IST)

நாப்கின் பற்றி பொது வெளியில் பேசுகிறோம்.... இதுவே பெரிய மாற்றம் -நடிகை நயன்தாரா

nayanthara
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர்  பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
 

சினிமாவில் நடிப்பதுடன் தொழிலதிபராக வலம் வரும் நயன்தாரா, கடந்தாண்டு Femi9 எனும் புதிய பிராண்ட் சானிட்டர் நாப்கினை அறிமுகப்படுத்தியிருந்தார்.

இந்த சானிடர் நாப்கினை மக்களிடம் கொண்டு சென்றவர்களை பாராட்டி  நடைபெற்ற விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார்.

இந்த நிலையில் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற
அவர் பேசியதாவது:

முன்பெல்லாம் சானிடர் நாப்கின் என வெளியில் சொல்வதற்கே தயங்கிட்டு இருந்தோம். ஆனால், இப்போது, தைரியமாக நாப்கின் பற்றி பொதுவெளியில் பேசுகிறோம். இதுவே பெரிய மாற்றம் என கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பல பெண்களுக்கு  இன்னும் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இல்லை., அவர்களும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.