வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (14:17 IST)

காதலர் தினம் முன்னிட்டு பூக்கள் விற்பனை அதிகரிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் பூ விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து வயதினரும் தங்கள் இணையுடன் இணைந்து கொண்டாடும் நிகழ்வாக இந்நாள் அமைவதால் இந்நாளில் இளைஞர்கள்  உள்ளிட்ட்டோர் தங்கள் ஜோடிகளுக்கு பூக்களைப் பரிசளிப்பர்.

இந்நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு  ஓசூரில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

உள்ளூர் சந்தையில் ரோஜா  ஒன்று ரூ.10 முதல் ரூ.20 வரைக்கும் ஒரு கட்டு ரூ. 400க்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகிறது.