1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (19:03 IST)

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

conductor
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இனி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தும் தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் மூலம் ஓட்டுனர்களுக்கு ரூ.2012 இலிருந்து 7 ஆயிரத்து 981 வரையிலும் நடத்துனர்களுக்கு 1965 முதல் 6 ஆயிரத்து 640 வரையிலும் ஊதியம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்